health-and-wellness

img

நிமெசலைட் மருந்து விற்பனை குறித்து கண்காணிக்க உத்தரவு!

புதுதில்லி,பிப்.21- தடை செய்யப்பட்ட வலி நிமெசலைட் வலி நிவாரண மருந்து சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா எனத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் நிமெசலைட் மருந்து தடை செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத விற்பனை குறித்துக் கண்காணிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிமெசலைட் மருந்தால் தலைவலி, வயிற்றுப்போக்கு, பார்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வழக்கு தொடரப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இந்த மருந்தை மனித பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த நிமெசலைட் மருந்து சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்யப்படுகிறதா எனக் கண்காணிக்க ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.